2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

ரூ.200 கோடி வசூல் சாதனை

R.Tharaniya   / 2025 ஏப்ரல் 20 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகளவில் ரூ.200 கோடி வசூலைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது அஜித்தின் ‘குட் பேட் அக்லி.

ஏப்ரல் 10ஆம் திகதி உலகமெங்கும் வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. தமிழகத்தில் அஜித் ரசிகர்கள் மத்தியில் இப்படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது.

சமீபத்திய அஜித் படங்களில் இதுவே சிறந்து என்று கொண்டாடி தீர்த்தார்கள். இதனால் ‘விடாமுயற்சி’ படத்தின் வசூலை 4 நாட்கள் வசூலில் கடந்தது ‘குட் பேட் அக்லி’

தற்போது உலகளவில் ரூ.200 கோடி வசூலை ‘குட் பேட் அக்லி’ கடந்திருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

மேலும், தமிழகத்தில் ‘துணிவு’ படத்தின் வசூலை முறியடித்து, அஜித் படங்களில் அதிக வசூல் செய்த படங்கள் பட்டியலில் 2ஆம் இடத்தை பிடித்திருக்கிறது.

அடுத்த வாரம் இறுதிக்கும் முதல் இடத்தில் இருக்கும் ‘விஸ்வாசம்’ வசூலை முறியடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, சிம்ரன், பிரசன்னா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இப்படத்தின் தமிழக உரிமையினை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றி வெளியிட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X