2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

ரெஜினாவின் சபதம்!

Editorial   / 2018 ஜூன் 01 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

''கோலிவூட்டை, ஒரு கலக்கு கலக்காமல் போக மாட்டேன்” என்று முடிவெடுத்துள்ளார் போலிருக்கிறது ரெஜினா. அழுத்தமான கதையம்சம் உள்ள படங்களாக இருந்தாலும் சரி, கவர்ச்சி வேடமாக இருந்தாலும் சரி, உடனடியாக நடிக்க சம்மதித்து விடுகிறார். அடுத்ததாக அவரது நடிப்பில், மிஸ்டர் சந்திரமவுலி திரைப்படம் வெளிவரவுள்ளது.

ரெஜினா, சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவர் என்றாலும், இதுவரை, தான் நடித்த படங்களில் சொந்தக் குரலில் பேசியது இல்லை. அவருக்கு இருந்த இந்த ஏக்கம், மிஸ்டர் சந்திரமவுலி மூலம் தீர்ந்து விட்டது.

இந்தப் படத்துக்காக, முதல் முறையாக சொந்தக் குரலில் பேசியுள்ளதை பரவசத்துடன் கூறி வருகிறார். தெலுங்கு படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துவந்த அவரது பார்வை, சமீபகாலமாக, தமிழ்த் திரைப்படங்கள் மீது திரும்பியுள்ளது. கோலிவூட், அவருக்கு சிவப்புக் கம்பளம் விரிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X