2025 மே 03, சனிக்கிழமை

ரோபோ சங்கரா இது? அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்

Ilango Bharathy   / 2023 ஏப்ரல் 18 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

சின்னத்திரையில் நகைச்சுவை நடிகராக அறிமுகமான ரோபோ சங்கர் தற்போது வெள்ளித் திரையிலும் முன்னனி நகைச்சுவை நடிகராக வலம் வருகின்றார்.

குறிப்பாக  புலி, விஸ்வாசம், மாரி, வேலைக்காரன் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்ததன் மூலம் தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார்.

ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவும் பிகில், விருமன்ஆகிய  படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி ரோபோ சங்கருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இந்திரஜா வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் ரோபோ சங்கர் உடல் மெலிந்து ஆளே மாறிப்போய் இருப்பதாக அதிர்ச்சி வெளியிட்டனர்.

ரோபோ சங்கரின் மெலிந்த புகைப்படம் வலைத்தளங்களிலும் வைரலானது. இந்நிலையில் ரோபோ சங்கருக்கு உடல்நல பாதிப்பு எதுவும் இல்லை என்றும் ஒரு படத்துக்காக உடல் மெலிந்து இருக்கிறார் என்றும் குடும்பத்தினர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X