2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

‘லக்ஷ்மி’படத்தைத் தடைசெய்ய கோரிக்கை

J.A. George   / 2020 நவம்பர் 05 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்ஷய் குமார் நடித்துள்ள ‘லக்ஷ்மி பாம்ப்’ படத்தை தடை செய்யக் கோரி ஏராளமானோர் வலியுறுத்தி வருகின்றனர்.

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய காஞ்சனா தமிழில் மாபெரும் வெற்றி பெற்றது. 

அந்தப் படத்தில் சரத்குமார் முதன்முறையாக மூன்றாம் பாலினத்தவராக நடித்திருந்தார். அதற்காக பல தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்தது.

தற்போது ராகவா லாரன்ஸ் காஞ்சனா படத்தை ஹிந்தியில் அக்ஷய் குமாரை வைத்து ‘லக்ஷ்மி பாம்ப்’ என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார். 

லக்ஷ்மி பாம் படத்தின் அறிவிப்பு வெளியானத்திலிருந்தே படத்திற்கு அங்கு எதிர்ப்பு நிலவி வந்தது. இந்தப் படத்தைத் தடை செய்யவேண்டும் என்று தொடர்ந்து வலுயுறுத்தி வருகின்றனர். 

இந்து கடவுளின் பெயரான லக்ஷ்மி என்பதுடன் பாம்ப் என்று இடப்பெற்றுள்ளது இந்துக்களை அவமதிப்பதாக எழுந்த புகார்களை அடுத்து படத்தின் பெயர் லக்ஷ்மி என்று மாற்றப்பட்டது.

தற்போது லக்ஷ்மி திரைப்படம் நவம்பர் 9ஆம் திகதி எல்லா நாடுகளிலும் ஓடிடி-யிலும் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் தியேட்டர் மற்றும் ஓடிடி-களில் சேர்ந்து வெளியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்து மதத்தை அவமதிப்பது போன்று பல காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகவும், மூன்றாம் பாலினத்தவர்களை அவமதித்ததாகவும் கூறி படத்தை தடை செய்ய ஏராளமான கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. ட்விட்டரில் #Ban_Laxmmi_Movie என்ற ஹாஷ்டாக் ட்ரெண்ட் ஆகி வருகிறது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X