2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

லண்டனில் துப்பறிவாளன் 2 படப்பிடிப்பு

Editorial   / 2019 நவம்பர் 04 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஷால் நடித்து மிஷ்கின் இயக்கத்தில் ஆக்ஷன் திரில்லராக 2017ம் ஆண்டு வெளியான படம் ‛துப்பறிவாளன்'. இப்படத்தில் விஷாலுடன் பிரசன்னா, வினய், அனு இம்மானுவேல், ஆண்ட்ரியா ஆகியோர் நடித்திருந்தார்கள். 

விஷால் பிலிம் பாக்டரி நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு அரோல் கரோலி இசையமைத்திருந்தார். தற்போது, துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. இப்படத்தையும் மிஷ்கினே இயக்குகிறார். விஷாலே தயாரிக்கிறார். இளையராஜா இசையமைக்கிறார்.

விஷாலுடன், ஆஷ்யா, நாசர், ரஹ்மான், பிரசன்னா, கௌதமி, சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்புகள் இன்று (04) லண்டனில் ஆரம்பமாகின்றது. முதல் கட்ட படப்பிடிப்பு 40 நாட்கள் நடைபெறுகிறது. இதனை விஷால் பிலிம் பேக்டரி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X