Freelancer / 2023 ஜூன் 22 , மு.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகர் விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நள்ளிரவில் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டுள்ளது படக்குழு.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்து வரும் படம் ‘லியோ’. கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் நிறைவடைந்துவிட்டன.
இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இன்னும் 10 நாட்களில் விஜய் நடிக்கும் போர்ஷன் முடிவடையும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். மேலும் விஜய்யின் பிறந்த நாளையொட்டி வரும் ஜூன் 22-ம் தேதி படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘நா ரெடி’ பாடல் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
இந்நிலையில், தற்போது முதல் பார்வையை வெளியிட்டுள்ளது படக்குழு. முதல் பார்வையில் ரத்தம் தெறிக்க, கையில் சுத்தியுடன் விஜய் ஆக்ரோஷமாக காட்சியளிக்கிறார். கூடவே ஓநாய் ஒன்றும் உள்ளது.
காஷ்மீரின் பனி படர்ந்த மலைகள் பின்னணியில் உள்ளன. கூடவே, In the WORLD Of Untamed Rivers, Calm Water Either Become Divine GOD or Dreaded DEMONS என்ற வாக்கியம் அதில் இடம்பெற்றுள்ளது. இதன் பொருள், "கட்டுக்கடங்காத நதிகளின் உலகில் அமைதியான நீர், தெய்வீகம் நிறைந்த கடவுள்களாக அல்லது பயங்கரமான பேய்களாக உருமாறும்" என்பதாகும். R

16 minute ago
37 minute ago
6 hours ago
10 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
37 minute ago
6 hours ago
10 Mar 2026