Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
George / 2017 ஏப்ரல் 28 , மு.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல நடிகர் வினுசக்கர்த்தி மறைவுக்கு நடிகர்களான ரஜினிகாந்த், விஜயகாந்த் ஆகியோர் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
நடிகர வினுசக்கரவர்த்தி நேற்றிரவு சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் தெரிவித்துள்ளனர்.
வினுசக்கரவர்த்தி மறைவுச் செய்தி அறிந்ததும், டுவிட்டரில் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.
அதேபோல் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “நடிகர் வினுசக்கரவர்த்தி மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து கலையுலகில் மிகப்பெரிய இடத்தை பிடித்திருந்தார், என்னுடன் கஜேந்திரா உட்பட பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுளாக உடல்நலம் சரியில்லாமல் இருந்தார். நண்பர் வினுசக்கரவர்த்தி, விஜயா மருத்துவமனையில் இருக்கும் பொழுது நான் நேரில் சென்று நலம் விசாரித்ததையும் நினைவு கூறுகிறேன்.
இவரது இழப்பு அவரது குடும்பத்துக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரையுலகினருக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். இவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago