2025 மே 12, திங்கட்கிழமை

விஷால் அணி சார்பில் களமிறங்கும் குஷ்பு

George   / 2017 ஜனவரி 01 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கலைப்புலி எஸ் தாணு தலைமையிலான குழு கடந்த 2015 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் சங்கத்தில் பதவி ஏற்றது. இதில் அம்மா கிரியேஷன் சிவா , பைவ் ஸ்டார் கதிரேசன் தேனப்பன் ராதா கிருஷ்ணன், ஆகியோர் முக்கிய நிர்வாக பொறுப்பில் இருந்து வந்தனர். பழைய நிர்வாகத்தின் பதவி காலம் முடிவடைந்துள்ளது

இந்நிலையில் வருகிற பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி மீண்டும் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த ஆண்டும் பலர் தனி தனி குழுக்களாக தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட முயற்சித்து வருகிறார்கள்.

இதற்கிடையே அண்மையில், விஷால் தலைமையிலான கூட்டம் நடைபெற்றது. இதன் முதல் முயற்சியாக விஷால் தலைமையிலான அணியின் சார்பாக தலைவர் பதவிக்கு நடிகை. குஷ்பூ சுந்தர் போட்டியிடவுள்ளார் என்று விஷால் கூறியுள்ளார்.

மேலும், மற்ற நிர்வாகிகளுக்கான தேர்வும் நடைபெற்று வருவதாக விஷால் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X