Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
George / 2016 ஓகஸ்ட் 31 , மு.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் - விஷால் அணிகள் மோதிக்கொண்ட நிலையில், அவர்களுக்கிடையிலான பஞ்சாயத்து இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
அண்மையில் நடைபெற்ற ராதிகா மகள் ரேயானின் திருமண நிகழ்ச்சியில் விஷால் அணியினர் யாரும் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் அழைக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
அதோடு, சரத்குமாரின் மகளான வரலட்சுமியும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. இதுதான் பலருக்கும் ஆச்சர்யமாக இருந்தது.
இந்த நிலையில், விஷாலின் 38ஆவது பிறந்த நாள் விழாவில் ஒருநாள் முழுக்க அவருடன் இணைந்து கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார் வரலட்சுமி.
அதோடு, விஷாலுக்கு டுவிட்டரில் ஒரு முத்தமும் பிறந்த நாள் பரிசாக கொடுத்துள்ளார் வரலட்சுமி. இது டுவிட்டரில் வெளியானதை அடுத்து, அவர்களைப் பற்றிய திருமண செய்திகள் வெளியானபோது மறுப்பு தெரிவித்த போதும், இந்த முத்தம் அவர்களது திருமணத்தை உறுதிபடுத்துவது போல் இருப்பதாக பரபரப்பு தகவல் பரவிவருகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
5 hours ago
6 hours ago