2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராய்

George   / 2016 ஒக்டோபர் 11 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகை ஐஸ்வர்யராய், அண்மைய திரைப்படங்களில் ஹீரோக்களுடன் மிக நெருக்கமாக நடிப்பது அபிஷேக் பச்சனுக்கு பிடிக்கவில்லை. இதனால், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. விரைவில் பிரிந்து விட இருக்கிறார்கள் என்ற செய்தி பரவியது.

அதோடு மாமியார் ஜெயாபச்சனுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் ஒத்துப்போகவில்லை. இதனால் குடும்பத்தில் பிளவு என்றும் செய்திகள் வெளிவந்தது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பது போன்று நேற்று அவர் குடும்பத்துடன் துர்கா பூஜையில் கலந்து கொண்டார்.

மும்பை ராமகிருஷ்ணா மிஷன் வைத்தியசலையில் நடந்த துர்காபூஜையில் அமிதாப், அவரது மனைவி ஜெயாபச்சன் மகள் ஸ்வேதாவுடன் கலந்து கொண்டார்.

இவர்களுடன் ஐஸ்வர்யாராய் தனது கணவர் அபிஷேக் பச்சன் மகளுடன் கலந்து கொண்டனர். அனைவரும் ஒரே வரிசையில் அமர்ந்து பூஜையில் கலந்து கொண்டனர். ஐஸ்வர்யாராய், அபிஷேக் பச்சன், குழந்தை மூவரும் வெள்ளை உடையில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X