2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

வயிற்றில் குழந்தையுடன் தலைகீழாக நின்று யோகா செய்யும் பூஜா

Editorial   / 2023 ஜனவரி 10 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகை பூஜா ராமச்சந்திரன் சமீபத்தில் கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிட்ட நிலையில், தற்போது வயிற்றில் குழந்தையுடன் தலைகீழாக நின்று யோகா செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 சமூக வலைதளத்தில், மிகவும் ஆக்டிவான நட்சத்திர ஜோடியாக இருப்பவர்கள் நடிகை பூஜா ராமச்சந்திரன் மற்றும் அவருடைய கணவர் ஜான் கோகென். பிட்னஸ் மீது அதிக ஆர்வம் கொண்ட இவர்கள், அவ்வப்போது அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தும் விதமாக, வொர்க்கவுட் செய்து வெளியிடும் வீடியோக்கள் மிகவும் பிரபலம்.

நடிகை பூஜா ராமச்சந்திரன் தொகுப்பாளராக இருந்து பின்னர் நடிகையாக மாறியவர். தமிழில் பீட்சா, களம், காதலில் சொதப்புவது எப்படி, காஞ்சனா 2 , போன்ற பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே தன்னுடன் பணியாற்றிய தொகுப்பாளர் விஜே கேரிக் என்பவரை கடந்த 2010 ஆம் ஆண்டு, காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், 2017ல் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

விவாகரத்துக்கு பின்னர்,  மலையாள நடிகரான ஜான் கோகென் என்பவருடன் டேட்டிங் செய்து வந்த பூஜா ராமச்சந்திரன், 2019 ஆம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார். இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் என்பதால்,  இவர்களுடைய திருமணத்தில் நண்பர்கள் மற்றும் முக்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்ள, எளிமையாக நடத்தினர். 

திருமணத்திற்கு பின்னர் இருவரும் தங்களுடைய ஒர்க்கவுட் வீடியோ மற்றும் போட்டோ ஷூட் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வந்தனர். அதே போல் நடிகர் ஜான் கோகென் 'சார்பட்டா' படத்தின் மூலம் அனைவராலும் கவனிக்கப்பட்ட நடிகராக மாறினார். தற்போது அஜித் நடித்துள்ள 'துணிவு' உள்ளிட்ட சில தமிழ் படங்களில் அடுத்தடுத்து நடிக்கும் வாய்ப்பை கைப்பற்றி வருகிறார். கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்னர், பூஜா தாண்டிய கணவருடன் சேர்த்து கர்ப்பமாக இருக்கும் தகவலை புகைப்படம் வெளியிட்டு அறிவித்தார்.

இந்நிலையில் கர்ப்பமான நேரத்தில் கூட தன்னுடைய உடற்பயிற்சியில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாமல், பூஜா ராமச்சந்திரன் தலைகீழாக நின்றபடி வெளியிட்டுள்ள ஒர்க் அவுட் வீடியோ அனைவரையும் வியப்படைய செய்துள்ளது. இப்படி செய்வதால் குழந்தை நன்கு ஆரோக்கியமாக இருக்கும் என்பதையும் அவர் அந்த வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X