Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
J.A. George / 2020 நவம்பர் 04 , பி.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹெச் வினோத் இயக்கத்தில், தல அஜித்குமார் நடித்து வரும் திரைப்படம் வலிமை. கொரோனா பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்ட படப்பிடிப்பு தற்போது மீண்டும் ஆரம்பித்துள்ளது.
எஞ்சியுள்ள படப்பிடிப்புகளில் கலந்து கொள்வதற்காக நடிகர் அஜித் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டிக்கு சென்றுள்ளார்.
தனது ஹோட்டல் அரங்கில் இருந்து படப்பிடிப்பு நடக்கும் தளத்திற்கு தனது மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றுள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாகியுள்ளது.
ஏற்கனவே வலிமை திரைப்படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளும் மோட்டார் சைக்கிள் சேசிங் காட்சிகளும் நிறைந்திருக்கும் என தெரிய வந்திருக்கும் நிலையில் ஹோட்டல் அறையில் இருந்து மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு சூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றது தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
திரைப்படத்தின் கதாநாயகி யார் வில்லன் யார் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்புகளை படக்குழுவினர் இன்னமும் தெரிவிக்கவில்லை.
17 minute ago
24 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
24 minute ago
32 minute ago