Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜூன் 12 , மு.ப. 08:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி வசூல் மழை பொழிந்த ‘துப்பாக்கி’ படத்தின் இரண்டாம் பாகமான ‘தளபதி 65’ திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மடோனா செபஸ்டியன் நடிக்க உள்ளதாக வெளியான தகவலை படக்குழுவினர் மறுத்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பால் வெளியிடப்படாமல் விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் கிடப்பில் உள்ளது. இந்த நிலையில் விஜய் அடுத்து ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘விஜய் 65’ திரைப்படத்துக்கு தமன் இசையமைக்க உள்ளதாக கூறப்பட்ட தகவலை அவரே உறுதிப்படுத்தி உள்ளார்.
பெயர் வைக்கப்படாத ‘விஜய் 65’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக கேரளாவைச் சேர்ந்த நடிகை மடோனா செபாஸ்டியன் நடிக்க உள்ளதாக தகவல் பரவியது.
இவர் ஏற்கெனவே தமிழில் ‘கவண், பா பாண்டி, காதலும் கடந்து போகும், ஜூங்கா’ போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், விஜய் ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிப்பதாக கூறப்பட்ட தகவலை படக்குழு மறுத்துள்ளதால், இதையடுத்து, விஜய் உடன் ஜோடி சேர முன்னணி மற்றும் இளம் நடிகையர் பலரும், காய் நகர்த்தி வருகின்றனராம்.
52 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
9 hours ago