S.Renuka / 2026 மார்ச் 04 , பி.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
பின்னணிப் பாடகி சுசித்ரா அண்மைக்காலமாக திரைத்துறையைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் குறித்துப் பல்வேறு அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்து வருகிறார்.

தமிழ் திரையுலகில் பலர் கொக்கைன் பயன்படுத்துகிறார்கள் - பாடகி சுசித்ரா பகீர் பேட்டி
அந்த வகையில், தற்போது நடிகை த்ரிஷா தனது உடல் எடையைக் குறைப்பதற்காக ‘ஓசெம்பிக்’ (Ozempic) எனும் நீரிழிவு நோய்க்கான மருந்தை ஊசி மூலம் எடுத்துக் கொள்வதாகச் சுசித்ரா குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த மருந்து பொதுவாக சர்க்கரை நோயாளிகளுக்காகப் பரிந்துரைக்கப்படுவது என்றும், ஆனால், திரைத்துறையில் இருப்பவர்கள் விரைவாக எடையைக் குறைக்க இதனைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

த்ரிஷாவின் தற்போதைய உடல் தோற்றத்தை வைத்து இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ள சுசித்ரா, வாரந்தோறும் இந்த ஊசியைப் போட்டுக் கொள்வதால் த்ரிஷாவின் முகம் பொலிவிழந்து (Sunken face), மிகவும் மெலிந்து காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
ஓசெம்பிக் மருந்தின் தீவிரப் பக்கவிளைவுகள் காரணமாகவே அவரது முகத்தில் முதிர்ச்சியான தோற்றம் தென்படுவதாகவும், இது ஆரோக்கியத்திற்குப் பெரும் கேடு விளைவிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். த்ரிஷாவைத் தொடர்ந்து பல நடிகைகளும் இத்தகைய குறுக்கு வழிகளைப் பின்பற்றுவதாக அவர் சாடியுள்ளார்.
சமூக வலைதளங்களில் சுசித்ராவின் இந்த நேர்காணல் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

த்ரிஷாவின் ரசிகர்கள் இக்குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்து வரும் நிலையில், ‘ஓசெம்பிக் பேஸ்’ (Ozempic Face) எனப்படும் மருத்துவ ரீதியான மாற்றங்கள் குறித்துப் பலரும் இணையத்தில் தேடத் தொடங்கியுள்ளனர். நடிகை த்ரிஷா தரப்பிலிருந்து இதுவரை இந்த சர்ச்சைக்கு அதிகாரப்பூர்வமாக எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை.
இதனை சமூக ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
23 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
55 minute ago
1 hours ago