2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

வாரிசு அப்டேட்; உற்சாகத்தில் ரசிகர்கள்

J.A. George   / 2022 ஓகஸ்ட் 02 , பி.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

‘பீஸ்ட்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் நடித்து வரும் படம் தான் “வாரிசு”. இப்படத்தை இயக்குனர் வம்சி படைப்பள்ளி இயக்க தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார்.

இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், நடிகர் சாம், யோகி பாபு, ஸ்ரீகாந்த் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

தமன் இசையில் உருவாகி வரும் இப்படத்தை இயக்குனர் வம்சி தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாக்கி வருகிறார்.

அவ்வப்போது இப்படம் குறித்த தகவல்கள் மற்றும் படப்பிடிப்பு புகைப்படங்கள் என வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வரும் நிலையில், தற்போது விஜய் இப்படத்தின் மூலம் ரசிகர்களுக்கு கொடுக்க இருக்கும் இன்ப அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது, இந்த படத்தில் விஜய் இரட்டை கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும், அதில், நடிகர் மற்றும் வில்லன் கதாப்பாத்திரங்களில் விஜய் தான் நடிக்க போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X