Freelancer / 2022 மே 24 , பி.ப. 12:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
விக்ரம் படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரமே எஞ்சியுள்ள நிலையில், சமீபத்திய பேட்டியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படப்பிடிப்பு தளத்தில் நடந்த சில சுவாரஸ்ய தகவல்களை வெளியிட்டுள்ளார்.

மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ், தற்போது விக்ரம் படத்தை இயக்கி முடித்துள்ளார். கமல் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் பகத் பாசில், சூர்யா, விஜய் சேதுபதி, காளிதாஸ் ஜெயராம், நரேன், அர்ஜுன் தாஸ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
அனிருத் இசையில், கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவில் பிரம்மாண்டமாக தயாராகி உள்ள இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் கமல்ஹாசன் தயாரித்துள்ளார்.

தொடர்ந்து, தமிழில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு பான் இந்தியா படமாக வெளியிடப்பட உள்ளது.
விக்ரம் படம் வருகின்ற ஜூன் 3 ஆம் திகதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது. படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரமே எஞ்சி உள்ளதால் புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், சமீபத்திய பேட்டியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படப்பிடிப்பு தளத்தில் நடந்த சில சுவாரஸ்ய தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அதன்படி விக்ரம் படத்தின் முதல் காட்சியை கமலின் அலுவலகத்தில் படமாக்கியதாக தெரிவித்த லோகேஷ், அந்த காட்சியில் கமலின் கண்களை மட்டும் குளோஸ் அப் ஷாட் எடுத்ததாகவும், அப்போது முதன்முறையாக கமல் நடிப்பதை நேரில் பார்த்த பூரிப்பில், அந்த காட்சி முடிந்ததும் கட் சொல்வதற்கு பதிலாக கெட்ட வார்த்தையில் கத்திவிட்டதாக கூறி உள்ளார்.
5 hours ago
8 hours ago
17 Jan 2026
17 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
17 Jan 2026
17 Jan 2026