Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 செப்டெம்பர் 09 , பி.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் சகோதரி விஜயலட்சுமி இன்று காலமானார். அவரின் இறுதிச்சடங்கு நாளை மாலை 3 மணி அளவில் அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது.
இவரது மறைவுக்கு தேமுக திமுக தொண்டர்களும், பொதுமக்குளம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
நடிகர் விஜயகாந்த் அவர்களுடன் பிறந்தவர்கள் ஆறு சகோதரர்கள், ஐந்து சகோதரிகள் என மொத்தம் 11 பேர். விஜயகாந்த் அவர்களின் மூத்த அண்ணன் பெயர் நாகராஜ், இவருக்கு அடுத்ததாக பிறந்தவர் தான் விஜயகாந்த். அவரைத் தொடர்ந்து, செல்வராஜ், பால் ராஜ், ராம்ராஜ், ப்ரித்விராஜ், விஜயலட்சுமி, சித்ரா, திருமலாதேவி, சாந்தி என வரிசையாக பிறந்தார்கள்.
இதில், செல்வராஜ் மற்றும் பால்ராஜ் இருவர் மட்டுமே மதுரையில் வசித்து வருகிறார்கள். மதுரையில் விஜயகாந்த்தின் தந்தை கட்டிய ஆண்டல்பவன் இல்லத்தில் இவர்கள் இருவரும் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.
மற்ற சகோதரர், சகோதரிகள் அனைவரும் சென்னை, தேனி என பல ஊர்களில் இருக்கிறார்கள். இந்நிலையில், விஜயகாந்த் அவர்களின் மூத்த சகோதரி சென்னையில் தனது குடும்பத்தோடு வசித்து வந்த நிலையில் இன்று காலமானார்.
அவரின் இறுதிச்சடங்கு நாளை மாலை ஒரு மணி முதல் மூன்று மணி வரை, அண்ணாநகர் வடக்கு குறுக்கு தெருவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது. விஜயகாந்த் மூத்த சகோதரியின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மருத்தவரான விஜயலட்சுமி பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவ நிபுணராகப் பணியாற்றி வந்தார். இவரும் விஜயகாந்தைப் போலவே ஏழை எளிய நோயாளிகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. மருத்துவத் துறையில் அவரது சேவையைப் பாராட்டும் வகையில் பல்வேறு விருதுகளை விஜயலட்சுமி பெற்றுள்ளார். இவரது மறைவுக்கு தேமுக தொண்டர்களும், பொதுமக்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். R
13 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
51 minute ago