2025 மே 09, வெள்ளிக்கிழமை

விஜய் சேதுபதியின் வீணாகும் உழைப்பு

Editorial   / 2019 ஏப்ரல் 01 , பி.ப. 12:00 - 1     - {{hitsCtrl.values.hits}}

குறுகிய காலத்தில், பெரும் இரசிகர்களை சம்பாதித்திருக்கும் நடிகர் விஜய் சேதுபதிக்கும் ஏனைய ஹீரோக்களுக்கும் இடையில், பல வித்தியாசங்கள் உள்ளன. நண்பர்களுக்காக குறும்படத்தில் நடிப்பார், சிறப்புத் தோற்றத்தில் நடிப்பார், இமேஜ் பார்க்காமல் நடிப்பார். திரைப்படம் வெளிவருவதில் சிக்கல் என்றால், சம்பளத்தில் விட்டுக்கொடுப்பார் என்று, பல அம்சங்களைக் கைவசம் வைத்திருக்கிறார்.

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், விஜய்சேதுபதி, கஷ்டப்பட்டு, கடின உழைப்பை கொடுக்கும் திரைப்படங்கள், அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தராததோடு வணிக ரீதியில் வெற்றி பெறாமலும் போவது குறித்து, அவரது இரசிகர்களை கவலை தெரிவித்துள்ளனர்.

விஜய் சேதுபதியின் முதல் சொந்தத் திரைப்படம் “ஆரஞ்சு மிட்டாய்”. நண்பனை இயக்குநராக்கிப் பார்க்க ஆசைப்பட்டுத் தயாரித்து படமர்கும். அதில் 60 வயதைத் தாண்டிய முதியவராக நடித்தார். அடுத்தது “சீதக்காதி”. 70 வயதை கடந்த நாடக நடிகராக நடித்தார். பல மணிநேரம் மேக்அப், பல நாள் ஒத்திகை என்று இந்தத் திரைப்படத்துக்கு  பெரிய உழைப்பைக் கொடுத்தார். அதுவும் ஏமாற்றி விட்டது.

தற்போது வெளிவந்துள்ள சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில், தன்னுரைடய இமேஜ் பற்றிக் கவலைப்படாமல், திருநங்கையாக நடித்துள்ளார். இதற்கு முன் பல நடிகர்கள் திருநங்கையாக நடித்திருந்த போதும், இந்த அளவுக்கு இறங்கி யாரும் நடித்ததில்லை. அப்படி நடித்தும், உரிய பெயரும் வசூலும் விஜய் சேதுபதிக்கு கிடைக்கவில்லை. இது, அவரது இரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 1

  • R GAJENDRAN Monday, 01 April 2019 01:17 PM

    கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது.... கஷ்டப்படாம கிடைக்கிறது என்றைக்குமே நிலைக்காது... இவர் இப்பொழுது படும் கஷ்டம் அவமானம் எல்லாம் ஒரு நாள் சாதனையாக மாறும்... அதுவரை இவரின் உழைப்பு தொடரும். இரா கஜேந்திரன் கொழும்பு

    Reply : 0       1


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X