J.A. George / 2022 ஓகஸ்ட் 02 , பி.ப. 01:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரசிகர்களால் செல்லமாக மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் நடிகர் விஜய் சேதுபதி, தமிழ் சினிமாவில் முதல் முதலில் முன்னணி நடிகர்களோடு, துணை வேடத்தில் தான் நடிக்க ஆரம்பித்தார்.
இவர் ஹீரோவாக நடிப்பது மட்டுமின்றி தனக்கு பிடித்த கதாபாத்திரங்களான சிறு கதாபாத்திரங்கள் மற்றும் வில்லன் போன்ற அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தி வருகிறார். தற்போது இவர் நடித்த விக்ரம் திரைப்படத்தின் மூலம் மாபெரும் வெற்றியை கண்ட விஜய் சேதுபதி தற்போது பல படங்களில் ஹீரோ மற்றும் வில்லனாக பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் எடுக்கப்பட்ட பேட்டியில் தனது வாழ்க்கைக்கான சக்சஸ் குறித்த விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் “எப்பொழுது ஒருவர் நான் இந்த விஷயத்தை கற்றுக் கொண்டு விட்டேன், எனக்கு இது தெரியும் என்று கூறுகிறார்களோ, அவர்கள் வாழ்வில் வீழ்ச்சி அடைய தொடங்கிவிட்டனர் என்று அர்த்தம்”, நாம் அந்த வார்த்தைகளை ஒரு போதும் பயன்படுத்தக் கூடாது.
ஏனெனில், நாம் வாழும் வாழ்க்கையில் தினமும் மற்றவர்களிடம் இருந்து புதுப்புது விஷயங்களை கற்றுக் கொண்டுதான் இருக்கின்றோம் வாழ்வில் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளது தனக்கு எல்லாம் தெரியும் என்று பேசுவது ஓவர் கான்ஃபிடன்ட்டை ஏற்படுத்திவிடும் அதன் மூலம் நாம் சீக்கிரம் விழுந்து விடுவோம். அதனால் அவற்றை தவிர்த்து புது விஷயங்களை கற்றுக்கொண்டு வாழ்ந்து வந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம் என்று தனது சக்சஸ் சீக்ரெட்டை பகிர்ந்து உள்ளார். இவர் கூறியுள்ள இந்த விஷயங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது மட்டுமின்றி அனைவரிடமும் தன்னம்பிக்கையும் ஏற்படுத்தியுள்ளது.
16 minute ago
36 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
36 minute ago
1 hours ago