Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 12 , பி.ப. 03:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரவர மீராமிதுன் என்ற பெயரைக் கேட்டாலே சினிமா ரசிகர்கள் மட்டுமில்லாமல் தமிழ்நாட்டு மக்கள் அனைவருமே காரித்துப்பி கொண்டிருக்கின்றனர்.
அதற்கு காரணம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய் மற்றும் சூர்யா ஆகியோரை மரியாதை இன்றி பேசியதுதான்.
இதற்கு பாரதிராஜா அதிகாரபூர்வமாக ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்கள் அனைவருமே தங்களுடைய கோபத்தை வெளிக்காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் மீராமிதுன் தற்போது விஜய்க்கும் விவேக்கும் சிண்டு முடிந்து விட ஒரு வேலையை செய்துள்ளார்.
தளபதி விஜய் நேற்று தனது வீட்டில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு கேட்டுக் கொண்டதற்காக ஒரு மரக்கன்றை நட்டு புகைப்படங்களை வெளியிட்டார். அந்தப் புகைப்படத்திற்கு ஏகப்பட்ட லைக்குகள் குவிந்து கொண்டிருக்கின்றன.
அந்த புகைப்படத்தை பார்த்த மீரா மிதுன், தனது ட்விட்டர் பக்கத்தில் மரம் நடுவது என்றால் இது இல்லை. விவேக் சார் செய்வதைப் போல நிறைய நட வேண்டும் என்பதைப் போன்ற கருத்தை தெரிவித்துள்ளார். அதை நடிகர் விவேக்கும் டாக் செய்துள்ளார்.
அதனைப் பார்த்த விவேக் உடனடியாக மீராமிதுன் ஒரு அட்வைஸ் கொடுத்துள்ளார். உங்கள் பதிவு பல லட்சக்கணக்கான ரசிகர்கள் மனதை பாதிக்கும் எனவும், விஜய் மற்றும் மகேஷ்பாபு ஆகிய இருவரிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
22 minute ago
35 minute ago