2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

விண்ணைத்தாண்டி வருவாயா - 2இல் சிம்பு அவுட்; மாதவன் இன்

Editorial   / 2018 பெப்ரவரி 21 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கௌதம் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில், சிம்பு, த்ரிஷா நடிப்பில் 2010ஆம் ஆண்டு வெளியாகி, சக்கைப்போடு போட்ட 'விண்ணைத்தாண்டி வருவாயா', இன்று வரை, காதலர்களின் ஃபேவரிட்டாக திகழ்கிறது.

இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில், சிம்புவுக்கு பதிலாக, மாதவன் நடிக்க இருக்கிறாராம். நாயகி பற்றிய அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

மாதவனின் சினிமா பயணத்தில் 'விண்ணைத்தாண்டி வருவாயா 2' மிக முக்கியமான திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, கௌதம் மேனனின் முதல் திரைப்படமான 'மின்னலே'இல், மாதவன் தான் நாயகனாக கலக்கியிருந்தான். இதுவும் பெரிய வெற்றிப்படமாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சிம்புவின் திரைப்பயணத்தில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் சிம்பு இல்லாததற்கு காரணம், 'அச்சம் என்பது மடமையடா' படத்தில் கௌதம் மேனனுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் தான் என்று கூறப்படுகிறது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X