Editorial / 2025 பெப்ரவரி 16 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பெங்களூரு நோக்கி யோகிபாபு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதிகாலை 3 மணியளவில் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடியை கடந்த போது, திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு மீது ஏறி கார் விபத்துக்குள்ளானது.
இந்தில் எந்தவித காயமுமின்றி யோகி பாபு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக தகவல் வெளியானது. மேலும், காவல்துறையினர் நீண்ட நேரம் போராடி நெடுஞ்சாலையின் நடுவில் சிக்கிய காரை அப்புறப்படுத்தியதாக செய்திகள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியானது.
இது தொடர்பாக தனது சமூகவலைதளத்தில், “நலமாக இருக்கிறேன். இது தவறான செய்தி” என்று தெரிவித்தார் யோகி பாபு. மேலும், இந்த விபத்து தொடர்பாக, “அது ஒரு தவறான செய்தி. அந்த மாதிரி எதுவுமில்லை. யாருக்கும் எதுவும் ஆகவில்லை. அது ஒரு தயாரிப்பு நிறுவனத்தின் வண்டி தடுப்பின் மீது மோதிவிட்டார். முன்னால் சென்ற நாங்கள் திரும்பி போய் என்னவென்று பார்த்து சரி செய்து அனுப்பிவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார் யோகி பாபு.
23 minute ago
29 minute ago
30 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
29 minute ago
30 minute ago
35 minute ago