Editorial / 2023 ஏப்ரல் 17 , பி.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்', 'மிஸ்டர் லோக்கல்' போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ஷாலு ஷம்மு.
சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் ஷாலு ஷம்மு நண்பர்களுடன் விருந்து நிகழ்ச்சியில் கடந்த 9-ஆம் திகதி இரவு கலந்து கொண்டுள்ளார்.
அந்த விருந்துக்குச் செல்லும் போது, தான் இரண்டு மாதங்களுக்கு முன்பு வாங்கி ரூ.2 இலட்சம் மதிப்புள்ள ஐ போனையும் எடுத்துச் சென்றிருந்துள்ளார்.
பின்னர் நிகழ்ச்சி முடிந்து சூளைமேட்டில் உள்ள அவரது நண்பர் வீட்டில் தங்கியுள்ளார். அடுத்த நாள் எழுந்து பார்க்கும் போது செல்போன் காணமல் போனதை அறிந்த ஷாலு ஷம்மு நட்சத்திர விடுதிக்கு சென்று தேடியும் கிடைக்காததால் இது தொடர்பாக பட்டினபாக்கம் பொலிஸ் நிலையத்தில் அவர் புகாரளித்தார்.
மேலும், ஐபோன் காணாமல் போன விவகாரத்தில் தன்னுடன் இருந்த நண்பர்கள் மீது சந்தேகம் இருப்பதாக கூறியதையடுத்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 hours ago
6 hours ago
8 hours ago
17 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
8 hours ago
17 Jan 2026