2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் ஆஸ்கார் தடை

Freelancer   / 2022 ஏப்ரல் 09 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆஸ்கார் விருது வழங்கும் நிகழ்வில் அமெரிக்க நடிகர் கிறிஸ் ராக்கை கண்ணத்தில் அறைந்ததையடுத்து, வில் ஸ்மித் ஆஸ்கார் விழா மற்றும் பிற அகாடமி நிகழ்வுகளில் இருந்து 10 ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளார்.

94 வது ஆஸ்கார் விருது வழங்கும் நிகழ்வில் ஸ்மித் மேடையில் கோபத்தை வெளிப்படுத்தியதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அறிக்கை ஒன்றில் அகாடமி தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், வில் ஸ்மித் தனது செயலுக்கு மன்னிப்பு கோரியதுடன், அகடமியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முடி உதிர்தல் நிலை அலோபீசியாவின் விளைவாக, தனது மனைவியின் மொட்டையடிக்கப்பட்ட தலையைப் பற்றி கேலி செய்ததற்காக நடிகர் கிறிஸ் ராக்கை  வில் ஸ்மித் ஆஸ்கார் மேடையில் கண்ணத்தில் அறைந்தார்.

விருது வழங்கும் விழாவை ஏற்பாடு செய்யும் The Academy Of Motion Picture Arts and Science, ஒழுக்காற்று நடவடிக்கை குறித்து விவாதிப்பதற்காக வெள்ளிக்கிழமை கூடியது.

இந்நிலையில், வில் ஸ்மித் ஆஸ்கார் விழா மற்றும் பிற அகாடமி நிகழ்வுகளில் இருந்து 10 ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .