2025 மே 06, செவ்வாய்க்கிழமை

வில்லன் நடிகருக்கு கோவில்

J.A. George   / 2020 டிசெம்பர் 23 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஜினிகாந்த் நடித்த ’சந்திரமுகி’ சிம்பு நடித்த ’ஒஸ்தி’ அனுஷ்கா நடித்த ’அருந்ததி’ உள்பட ஒரு சில தமிழ்த் திரைப்படங்களிலும் ஒரு சில ஹிந்தி திரைப்படங்களிலும் வில்லன் வேடத்தில் நடிகர் சோனுசூட் நடித்துள்ளார்.

திரையில் வில்லன் வேடத்தில் நடித்தாலும் நிஜத்தில் இவர் பொதுமக்களால் ஹீரோவாக பார்க்கப்படுகிறார். கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு சோனுசூட்  பல்வேறு உதவிகளை செய்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த துப்பா தாண்டா என்ற கிராமத்து மக்களை சோனு சூட் அவர்களுக்கு கோயில் கட்டி வழிபாடு செய்து வருகின்றனர். 

இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறியபோது ’திரையில் சோனுசூட் வில்லனாக இருந்தாலும் நிஜத்தில் அவர் எங்கள் கண்களுக்கு ஹீரோவாக திகழ்கிறார். 

ஆயிரக்கணக்கான கூலித் தொழிலாளிக்கு உதவி செய்த அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்த கோயிலை நாங்கள் கட்டியுள்ளோம். கடவுளுக்கு நிகரான அவருக்கு கோவில் கட்டியதை நாங்கள் அதிர்ஷ்டமாக கருதுகிறோம் என்றும் அவர்கள் நெகழ்ச்சியுடன் கூறியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X