Editorial / 2017 ஓகஸ்ட் 09 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

தல அஜித், காஜல் அகர்வால், விவேக் ஓபராய், அக்ஷரா ஹாசன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், எதிர்வரும் 24ஆம் திகதி வெளியாகவுள்ள விவேகம் திரைப்படம் குறித்து, திரைப்படத்தின் எடிட்டர் ரூபான் கூறியுள்ளார்.
“‘விவேகம்’ திரைப்படம், கொண்டாடக்கூடிய பிரம்மாண்டமான, சர்வதேச உளவுத் திரைப்படம். திரையில் அஜித் தோன்றும் ஒவ்வொரு காட்சியும், பலத்த இடியைப் போல் மிக வலுவாக இருக்கும். அவரது அசுர உழைப்பைக் கண்டு வியந்தேன். அஜித், இத்திரைப்படத்தில் செய்திருக்கும் ஆபத்தான சண்டைக் காட்சிகள், பார்ப்பவர்களை வாயைப் பிளந்து பார்க்கும் வகையில் இருக்கின்றன. இது ஒரு பிரம்மாண்ட ஆக்ஷன் திரைப்படமாக இருந்தாலும் இதில் வரும் கணவன், மனைவி காட்சிகள், மிக அழகாக படமாக்கப்பட்டுள்ளன” என்று அவர் கூறியுள்ளார்.

2 hours ago
19 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Nov 2025