2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

வீடு திரும்பினார் ஏ.ஆர்.

S.Renuka   / 2025 மார்ச் 16 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கிடையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், “இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்தவுடன், மருத்துவர்களைத் தொடர்பு கொண்டு அவரது உடல்நலன் குறித்துக் கேட்டறிந்தேன். அவர் நலமாக உள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தனர், மகிழ்ச்சி" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்பட்டது இதற்கு காரணம் என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரகுமானின் மகன் அமீன் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், “எங்களின் அன்பான ரசிகர்கள், குடும்பத்தினர் மற்றும் நலன் விரும்பிகளுக்கு அவர்களின் அன்பு பிரார்த்தனை மற்றும் ஆதரவுக்கு எனது மனமார்ந்த நன்றியின்னைத் தெரிவித்துக்கொள்கிறேன். எனது தந்தை நீர்சத்து குறைபாடு காரணமாக பலவீனமாக இருந்தார்.

அதனால் நாங்கள் வழக்கமான சில பரிசோதனைகளை மேற்கொண்டோம். அவர் இப்போது நலமாக உள்ளார் என்பதை மகிழ்வுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உங்களின் அன்பும் ஆசிர்வாதமும் எங்களுக்கு மிகவும் முக்கியம். உங்களின் அக்கரையையும் ஆதரவையும் நாங்கள் தொடர்ந்து எதிர்பார்க்கிறோம். அனைவருக்கும் அன்பும் நன்றியும்” என்று தெரிவித்துள்ளார்.

பரிசோதனைகள் முடிவந்த நிலையில் ஏ.ஆர்.ரகுமான் நலமுன் வீடு திரும்பியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X