J.A. George / 2020 டிசெம்பர் 15 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு ஐதராபாத்தில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் சரத்குமார், தற்போது வீடு திரும்பி உள்ளார்.
இதுப்பற்றி சரத்குமார் சமூகவலைதளத்தில், ''டிசம்பர் 8 ஆம் திகதி கொரோனா உறுதி செய்யப்பட்டு ஐதராபாத் அப்பல்லோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நான் இன்று(13) குணமடைந்து திரும்புகிறேன்.
கொரோனாவை அலட்சியமாக கருதாமல், அவசியம் இருந்தால் மட்டும் மக்கள் வெளியில் செல்ல கேட்டுக் கொள்கிறேன். எந்தவொரு மனிதருக்கும், பிற மனிதருக்கு பாதிப்பு ஏற்படுத்த உரிமையில்லை என்பதை மனதில் கொள்ளுங்கள்.
வெளியில் செல்லும் போது, முகக்கவசம்அணிந்து, சானிடைசர் உபயோகித்து, தனிமனித இடைவெளி கடைபிடித்து, சுயபாதுகாப்பை உறுதிசெய்து நோய்தொற்று பரவாமல் தடுத்திடுவோம். கொரோனாவை வீழ்த்துவோம்'' என பதிவிட்டுள்ளார்.
11 minute ago
2 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
2 hours ago
8 hours ago