Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Mayu / 2024 பெப்ரவரி 19 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
இயக்குநர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யாவுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. எனினும், ஆறு மாதங்கள் கூட கணவருடன் அவர் வாழவில்லை என்றும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாகவும் செய்தி வெளியானது.
இந்த நிலையில் ஷங்கர் மகள் ஐஸ்வர்யாவுக்கு இரண்டாவது திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது என்று அவரது சகோதரி அதிதி ஷங்கர் தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.
ஐஸ்வர்யாவுக்கு கணவராக வரப்போகிறவர் உதவி இயக்குநராக இருக்கும் தருண் கார்த்திகேயன் என்பது குறிப்பிடத்தக்கது. திருமண நாள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஷங்கர் மகளின் முதல் கணவர் ரோஹித் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாகவும் அதன்பின் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இருந்ததால் ஐஸ்வர்யா தனது கணவரை பிரிந்தார் என்று கூறப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
17 minute ago
22 minute ago