Editorial / 2017 ஒக்டோபர் 16 , பி.ப. 08:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் “தானா சேர்ந்த கூட்டம்”. இந்தத் திரைப்படத்துக்கு, அனிருத் இசையமைத்துள்ளார். சில நாட்களுக்கு முன், வைரல் ஹிட்டடித்த “ஜிமிக்கி கம்மல்” பாடலின் மூலம், கேரளாவைச் சேர்ந்த ஆசிரியைகளான ஷெரில் மற்றும் அன்னா எனும் இரண்டு இளம்பெண்கள் பிரபலமானார்கள். இந்தப் பாடலின் மூலம் ஷெரிலுக்கு ஏகப்பட்ட இரசிகர்கள் இருக்கிறார்கள்.
சினிமாவில் நடிக்கும் எண்ணம் இருப்பதாகவும் தனக்கு நடிகர் சூர்யா நடித்த “வாரணம் ஆயிரம்” மிகவும் பிடிக்கும் எனவும் கூறியிருந்தார் ஷெரில். எனவே, விரைவில் இவர் சினிமாவில் அறிமுகமாவார் என எதிர்பாக்கப்பட்டது. இந்நிலையில், இசையமைப்பாளர் அனிருத் பிறந்தநாள் ஸ்பெஷலாக, வெளியிடப்பட்ட “சொடக்கு” பாடல் டீசரில், அவர்கள் இருவரும் இடம்பெற்றுள்ளனர். இந்தப் பாடலின் டீசரில் நடித்திருப்பதன் மூலம் தனக்குப் பிடித்த நடிகரான சூர்யாவின் திரைப்படத்தில் பங்கேற்றுவிட்டார் ஷெரில்.
1 hours ago
19 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
19 Nov 2025