2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

ஸ்‌ரேயாவின் லக்கி ஹீரோ

Editorial   / 2017 ஓகஸ்ட் 09 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாஜி திரைப்படப் பெண் ஸ்‌ரேயா, சில வருட இடைவெளிக்குப் பின்னர், சிம்பு நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்படத்தில் நடித்தார்.  

இந்தத் திரைப்படம் வெற்றியைத் தரும் என்று எதிர்பார்த்தவருக்கு, அத்திரைப்படத்தின் தோல்வியால், ஏமாற்றமே மிஞ்சியது. தற்போது, பாலகிருஷ்ணா நடித்து வரும் பைசா வசூல் திரைப்படத்தில், நாயகியாக நடித்து வருகிறார்.  

இது பற்றி ஸ்‌ரேயா கூறுகையில், “100 திரைப்படங்களுக்கு மேல் நடித்துவிட்ட பாலகிருஷ்ணா, எனது லக்கி ஹீரோ. அவருடன் இதற்கு முன்னர் நடித்த இரண்டு படங்களும், மெகா ஹிட்டாகின. அந்த சென்மென்ட் காரணமாக, இப்போது பைசா வசூல் திரைப்படத்திலும் என்னை நடிக்க வைத்துள்ளனர். கதைப்படி, இந்தத் திரைப்படத்தில் நான் ஒரு பத்திரிகை நிருபர் வேடத்தில் நடிக்கிறேன். கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த வேடத்துக்கும், ஒரு பின்னணிக் கதை, திரைப்படத்தில் உள்ளது என்றார் ஸ்‌ரேயா.     


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X