Freelancer / 2025 செப்டெம்பர் 30 , பி.ப. 07:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
சோனி SAB (சன் டிவியில் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்ட சீரியல்) இன் 'ஸ்ரீமத் ராமாயண்' தொடரில் சிறுவயது ராமராக நடித்த எட்டு வயது நடிகர் வீர் சர்மா மற்றும் அவரது 16 வயது சகோதரர் ஷோரியா சர்மா ஆகியோர் மூச்சுத் திணறலால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
குழந்தை நட்சத்திரமான வீர் ஷர்மா தனது வீட்டில் நேர்ந்த தீ விபத்தில் மூச்சுத் திணறி உயிரிழந்தார். இந்த தீ விபத்தில் வீர் ஷர்மாவின் சகோதரர் செளர்யா ஷர்மாவும் உயிரிழந்தார்.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியில் வீர் ஷர்மா தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.
தனியார் பயிற்சி நிறுவனத்தின் ஆசிரியரான இவரின் தந்தை, சம்பவத்தின்போது பஜனைக்காக கோவிலுக்குச் சென்றுள்ளார். இவரின் தாயார் ரீடா ஷர்மாவும் நடிகை என்பதால், மும்பையில் படப்பிடிப்பில் இருந்துள்ளார்.
மூச்சுத் திணறலில் இருந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
எனினும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர்கள் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. R
5 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
2 hours ago