2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

ஸ்ரேயாவுக்கு டும் டும் டும்

Editorial   / 2018 பெப்ரவரி 08 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

2001ஆம் ஆண்டு வெளிவந்த 'இஷ்டம்' தெலுங்குத் திரைப்படம் மூலம் நாயகியாக அறிமுகமான ஸ்ரேயா, தமிழில் 2003ஆம் ஆண்டு வெளிவந்த 'எனக்கு 20 உனக்கு 18' திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதன்பின்பு 'மழை' திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார்.

ரஜினிகாந்த் ஜோடியாக ஸ்ரேயா நடித்து 2007இல் வெளிவந்த 'சிவாஜி' திரைப்படம் மூலம், தமிழில் நம்பர் 1 நடிகையாக மாறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டார். ஆனால், 'இந்திரலோகத்தில் நா அழகப்பன்' திரைப்படத்தில் வடிவேலுவுடன் ஜோடி சேர்ந்து ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடியதை அடுத்து, அவருக்கு நெகட்டிவ்வாக அமைந்தது.

பின்னர் அவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களும், வெற்றித் திரைப்படங்களாக அமையவில்லை. தொடர்ந்து, முன்னணி ஹீரோக்கள் யாரும் ஸ்ரேயாவை அவர்களது திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யவில்லை. இதனால், தமிழ்த் திரைப்படங்களில் அவர் நடிப்பது மிகவும் குறைந்தது. இருந்தாலும், தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்து வந்தார்.

இதனிடையே, ஸ்ரேயாவுக்கும் அவருடைய ரஷ்ய காதலருக்கும் இடையே, எதிர்வரும் மார்ச் மாதம் திருமணம் நடைபெற உள்ளதாக, டோலிவூட் வட்டாரங்களில் தகவல் பரவியுள்ளது. ஸ்ரேயா தற்போது அவரது வருங்கால கணவர் குடும்பத்தாரைச் சந்திக்க ரஷ்யா சென்றுள்ளாராம். நடிக்க வந்து 17 வருடங்கள் ஆகிவிட்டதால், திருமணம் செய்துகொண்டு செட்டிலாக, ஸ்ரேயா விரும்புவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X