2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

“ஹால்” படத்தின் மாட்டிறைச்சி காட்சி வழக்கு

Editorial   / 2025 ஒக்டோபர் 19 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

தணிக்கை வாரிய உத்தரவை எதிர்த்து ‘ஹால்’ படக்குழுவினர் கேரள ஐகோர்ட்டில் முறையிட்டுள்ளனர்.

அறிமுக இயக்குநர் வீர் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகாம் கதாநாயகனாக நடித்துள்ள புதிய படம், ‘ஹால்’. இந்தப் படத்திற்கு தணிக்கைச் சான்றிதழை பெறுவதற்காக, படக்குழுவினர் விண்ணப்பித்திருந்தனர். .

‘ஹால்’ படத்தில் இருந்து மாட்டிறைச்சி பிரியாணி சாப்பிடும் காட்சி மற்றும் சில வசனங்களை நீக்க வேண்டுமென மத்திய தணிக்கை வாரியத்தின் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், படக்குழுவினர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதால், ‘ஹால்’ திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்தக் காட்சி மற்றும் வசனத்தை நீக்கினால் படத்தின் கதையை அது மாற்றக்கூடும் எனக் கருதும், படக்குழுவினர், தணிக்கை வாரிய அதிகாரிகளின் உத்தரவை எதிர்த்து கேரள ஐகோர்ட்டில் முறையிட்டுள்ளனர். முன்னதாக, ‘ஹால்’ திரைப்படம், மலையாளம், இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் கடந்த செப்டம்பர் 12 ம் திகதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்டது.

இதனை எதிர்த்து, ஹால் படக்குழுவினர் கேரள உயர் நீதிமன்றத்தில் முறையிட்டனர். இந்த விவகாரம் குறித்த விசாரணையில், ஹால் திரைப்படத்தை நீதிமன்றமோ அல்லது அவர்கள் நியமிக்கும் பிரதிநிதியோ பார்க்க வேண்டும் என்று படக்குழுவின் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், நீதிபதி வி.ஜி. அருண் ஹால் திரைப்படத்தை விரைவில் பார்க்கபோவதாகக் கூறியதுடன், திரையிடலில் தணிக்கை வாரிய அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க வேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X