2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

ஹீரோவாக யோகி பாபு

Editorial   / 2020 மே 28 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல இயக்குநர் பா. இரஞ்சித் தயாரிக்கும் திரைப்படத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.

இயக்குநர் பா. இரஞ்சித், ‘பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ ஆகிய இரு திரைப்படங்களை தயாரித்துள்ளார்.

இந்த நிலையில், பா. இரஞ்சித்தின் நீலம் நிறுவனம், மேலும் ஐந்து திரைப்படங்களை  தயாரிக்கவுள்ளது.

லெனின் பாரதி, மாரி செல்வராஜ், அகிரன் மோசஸ், பிராங்கிளின் ஜகோப், சுரேஷ் மணி ஆகியோர் இந்தத் திரைப்படங்களை இயக்கவுள்ளனர்.

இந்த நிலையில், இவர்களில் எந்த இயக்குநர் யோகி பாபு நடிக்கும் திரைப்படத்தை இயக்கவுள்ளார் என இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

பா. இரஞ்சித் தயாரிப்பில் யோகி பாபு நடிக்கும் திரைப்படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X