Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2022 செப்டெம்பர் 30 , பி.ப. 02:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
மராட்டிய மாநிலம் மும்பையில் வசித்து வந்த இளம்பெண் அகன்ஷா மோகன். 30 வயதான இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 16-ம் திகதி வெளியான சியா என்ற படத்தில் ஷிபெய்ல் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், இவர் சில விளம்பரங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகையும், மாடல் அழகியுமான அகன்ஷா மோகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். மும்பை அந்தேரியில் ஒரு ஹோட்டலில் தங்கி இருந்த அகன்ஷா மோகன் தனது அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
அந்தேரி ஹோட்டலில் தங்கி இருந்த அகன்ஷா மோகன் வெகு நேரமாகியும் தனது அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஹோட்டல் ஊழியர்கள் இது குறித்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து ஓட்டலுக்கு வந்த பொலிஸார் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அங்குள்ள ஓர் அறையில் அகன்ஷா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதனை தொடர்ந்து அவரது உடலை மீட்ட பொலிஸார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அந்த அறையில் இருந்து ஒரு கடிதத்தையும் கைப்பற்றினர்.
அதில், ' எனது மரணத்திற்கு யாரும் காரணமல்ல... யாரையும் தொல்லை செய்ய வேண்டாம்' என எழுதப்பட்டிருந்தது. அந்த கடிதத்தை கைப்பற்றிய பொலிஸார் நடிகையின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
45 minute ago
51 minute ago
58 minute ago