2021 டிசெம்பர் 03, வெள்ளிக்கிழமை

மஹிந்தவின் கருத்துக்கு ரணில் பதில்

George   / 2017 ஜனவரி 13 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய சங்கத்தினால்,  GSP+ வரிச் சலுகை, நிறுத்தப்பட்டதால், இலங்கைக்கு எந்தவிதமான சிக்கலும் ஏற்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்

அவரது கருத்துக்கு பதிலளித்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, GSP+ வரிசலுகை கிடைத்தமை 500 மில்லியன் மக்கள் கொண்ட பாரிய சந்தையை கைப்பற்ற உதவியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

'இலங்கை 2003ஆம் ஆண்டு 2,500 மில்லியன் அமெரிக்க டொலரை வருமானமாக பெற்றிருந்தது. 2015ஆம் ஆண்டில், GSP+ வரிச்சலுகையை இழந்த நிலையில், 4,800 மில்லியன் அமெரிக்க டொலரை பெற்றிருந்தது.

எனினும், அதே வருடம் பங்களாதேஷ் வரிச்சலுகையை தனியாக அனுபவித்ததுடன், 26,000 மில்லியன் அமெரிக்க டொலரை வருமானமாக பெற்றுக்கொண்டது. அந்த நாட்டுக்கு பணப்பிரச்சினை இல்லை. ஆனால் எமக்கு உள்ளது' என்று தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X