George / 2016 மே 10 , பி.ப. 07:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என்.நிபோஜன்
தேசிய வீரர்கள் தினத்தின் வடமாகாண நிகழ்வு, முல்லைத்தீவு கொக்காவில் பகுதியில் அமைந்துள்ள நினைவு தூபியில் நேற்று செவ்வாய்க்கிழமை (10)இடம்பெற்றது.
பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுனர் றெஜினோல்ட் குரே கலந்துகொண்டார். காலை 9 மணியளவில் ஆரம்பமான இந்நிகழ்வில் உயிரிழந்த வீரர்களுக்கு மலரஞ்சலியும், 2 நிமிடங்கள் அஞ்சலியும் செலுத்தப்பட்டன.
முப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில், வடமாகாண ஆளுநர் செயலாளர் எல்.இளங்கோவன், அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், முப்படை உயரதிகாரிகள், பொலிஸ் உயரதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
5 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
21 Dec 2025