Ilango Bharathy / 2022 ஒக்டோபர் 04 , பி.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகப் பணக்காரர்களின் வரிசையில் முதல் இடத்தில் உள்ளவரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் ஸ்தாபகரும், அதன் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலோன் மஸ்க் (Elon musk) அண்மையில் ‘ஒப்டிமஸ்‘(Optimus) என்ற மனித உருவிலான ரோபோவை அறிமுகப்படுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள டெஸ்லா அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றிலேயே அவர் குறித்த ரோபாவை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இவ் ரோபோவானது ஒரு பொருளை ஓர் இடத்தில் மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்ல உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ”ஒப்டிமஸை செம்மைப்படுத்த இன்னும் பல பணிகளைச் செய்ய வேண்டியுள்ளது எனவும், எங்களது இலக்கு விரைவில் பயனுள்ள மனித உருவ ரோபோவை உருவாக்குவதான் என்றும், ரோபோ வணிகம் கார்களை விட அதிக மதிப்புடையதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
8 hours ago
8 hours ago
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
17 Dec 2025