2025 செப்டெம்பர் 02, செவ்வாய்க்கிழமை

அரசியல் குறித்த விளம்பரங்களுக்கு தடை

Editorial   / 2019 நவம்பர் 01 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமூக வலைதளமாக டுவிட்டரை பல கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், அரசியல் குறித்த விளம்பரங்களுக்கு தடை விதிக்க டுவிட்டர் நிறுவனம் முடிவு செய்துள்ளது. 

டுவிட்டர் வாயிலாக பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் மற்றும் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக தகவல்கள் வெளியாகிறது.

இதனையடுத்து, அரசியல் குறித்த விளம்பரங்களுக்கு தடை விதிப்பதாக டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து டுவிட்டர் நிறுவன தலைமை நிர்வாகி ஜாக் டோர்சி கருத்து வெளியிடுகையில்,

“முற்றிலும் தவறான தகவல்கள் மற்றும் போலியான தகவல்கள் ஆகியவற்றால் வரும் சிக்கல்களை தீர்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய கொள்கைகள் குறித்த விவரங்கள் அடுத்த மாதம் வெளியிடப்படும்”என்று கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X