Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Ilango Bharathy / 2021 ஜூன் 29 , பி.ப. 01:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்மார்ட் தொலைபேசி (Smart phone) மூலம் ஸ்கேன் செய்து கொரோனாத் தொற்றை கண்டறியும் நவீன முறையானது அபுதாபியில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இ.டி.இ. எனப்படும் ஸ்கேனர்கள் மின்காந்த அலைகளின் உதவியால் செயல்படக்கூடியன. சில்வர் நிறத்திலான ரேடார் ஒன்று ஸ்கேன் செய்ய வேண்டிய இடத்திலிருந்து 5 மீற்றர் தொலைவில் பொருத்தப்பட்டு அதன் தொடர்பு ஒரு தொலைபேசியுடன் இணைக்கப்படும்.
அத்தொலைபேசியை வைத்து வணிக வளாகம் அல்லது கட்டிடத்திற்குள் உள்நுழைவோரை ஸ்கேன் செய்தால் ஒரு சில வினாடிகளில் அவருக்கு கொரோனாத் தொற்று உள்ளதா? இல்லையா? என்பது அறிந்து கொள்ள முடியும் எனக்கூறப்படுகின்றது.
பச்சை நிறம் ஒளிர்ந்தால் கொரோனாத் தொற்று இல்லை என்றும் சிவப்பு நிறம் ஒளிர்ந்தால் கொரோனா உள்ளது என்றும் அர்த்தமாகும். இதனை அடுத்து சிவப்பு நிறம் ஒளிர்பவர்களுக்கு 24 மணி நேரத்திற்குள் பிசிஆர் பரிசோதனை செய்து கொள்ளப் பரிந்துரைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .