Shanmugan Murugavel / 2016 ஜூலை 09 , மு.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

தனது மெசஞ்சர் செயலியைப் பயன்படுத்தப்படுபவர்களுக்கு புதிய வசதியை வழங்குவது குறித்து சோதனையை மேற்கொண்டுள்ள பேஸ்புக், காணாமல் போகக்கூடிய தனிப்பட்ட தகவல்களைச் சோதித்துப் பார்த்துள்ளது.
குறித்த தகவலை உரித்துடையவரால் நிர்ணயிக்கப்படும் குறித்த நேரத்துடன் மேற்குறித்த வகையான தகவல்கள் காணாமல் போகும் என பேஸ்புக் தெரிவித்துள்ளது. இந்த வசதியானது, மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சோதனையில் இருக்கும் புதிய இரகசிய தகவல் பரிமாற்றச் சேவையின் ஒரு அங்கம் என பேஸ்புக் அறிவித்துள்ளது.
மேற்குறித்த வகையில் அனுப்பப்படும் தகவல்கள், அந்த சாதனத்திலேயே சேமிக்கப்படுகையில், தகவலை அனுப்புவோர், பயன்படுத்தும் ஒரு சாதனத்தை கட்டாயம் தெரிவு செய்ய வேண்டும். காணமல் போகவும் என அடையாளப்படுத்தப்படும் தகவல்கள், அந்த சாதனத்திலிருந்தும் அழிந்து போகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாருடனும் இரகசிய கலந்துரையாடலை ஆரம்பிப்பது அவரவரின் விருப்பம் என பேஸ்புக் தெரிவித்துள்ளதுடன், இரகசியக் கலந்துரையாடல்களை ஒரு சாதனத்தில் மட்டுமே பார்வையிட முடியும் என்பதால் இது அனைவருக்கும் சரியான அனுபவமாக இருக்காது என்று தாம் கருதுவதாகவும் தெரிவித்துள்ளது.
உடல்நிலை மற்றும் நிதிப் பிரச்சினைகளை மேலும் தனிப்பட்ட ரீதியாக பேண பயனர்கள் விரும்புவார்கள் என உதாரணமாக பேஸ்புக் வரிசைப்படுத்தியுள்ள நிலையில், காதல் விவகாரங்களை மேலும் தனிப்பட்ட ரீதியாகப் பேண பயனர்கள் விரும்புவார்கள் என ஏனையவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேற்கூறப்பட்ட யோசனையானது மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே சோதனை செய்யப்பட்டாலும், எதிர்வரும் நாட்களில் பரவலாக இச்சேவை அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலையில், காணொளிகள், GIFகளை இரகசியமாக பகிர முடியாத நிலை காணப்படுகிறது. இச்சேவை அறிமுகப்படுத்தப்பட்டவுடன், முறைப்பாடு செய்வதற்கு மேலதிக வசதிகள் காணப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 minute ago
23 minute ago
39 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
23 minute ago
39 minute ago
50 minute ago