Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 14 , மு.ப. 03:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
வளர்ச்சியடைந்து வரும் தென்கிழக்காசிய சந்தைகளில் முன்னணி இணையத் தொலைக்காட்சி சேவையாகத் திகழும் iflix, இலங்கையில் தனது அறிமுகத்தை மேற்கொண்டுள்ளது. iflixஇன் மூலம் ஆயிரக்கணக்கான தொலைக்காட்சி நிகழ்வுகள், திரைப்படங்கள், மேலும் பல நிகழ்ச்சிகளை, அலைபேசி, மடிக்கணினி, டப்லெட், தொலைக்காட்சியில் எங்கும் எப்போதும் பார்வையிட முடியும்.
மலேஷியா மற்றும் பிலிப்பைன்ஸில் 2015ஆம் ஆண்டு மே மாதம் தனது சேவையை ஆரம்பித்த iflix, 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தாய்லாந்தில் தனது சேவையை ஆரம்பித்ததுடன், கடந்த ஜூன் மாதம் இந்தோனேஷியாவில் தனது சேவையை ஆரம்பித்ததுடன், இறுதியாக இம்மாதம் தனது சேவையை இலங்கையில் ஆரம்பித்துள்ளது. கடந்த வருட இறுதி வரையில் 1,000,000 சந்தாதார்களைக் கொண்டிருந்தது.
Iflixஇன் இணையத்தளத்துக்குச் சென்று இச்சேவையினை ஆரம்பிக்க முடியுமென்பதுடன், முதல் 30 நாட்களுக்கு iflixஇன் சேவைகளை முற்றிலும் இலவசமாகப் பெற்றுக் கொள்ள முடியும். குறித்த 30 நாட்களைத் தொடர்ந்து iflixஇன் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு மாதாந்தம் 499 ரூபாயே செலுத்த வேண்டும் என்பதுடன், வருடாந்தக் கட்டணமாக ஒரே தரத்தில் சந்தாவைச் செலுத்துமிடத்து, 20 சதவீத விலைக்கழிவைப் பெற்று 4,308 ரூபாய்க்கு ஒரு வருடத்துக்கான சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
Iflixஇனை ஒரே நேரத்தில் ஐந்து சாதனங்களில் பார்வையிட முடியும் என்பதுடன், iflixஇல் காணப்படும் நிகழ்ச்சிகளை அலைபேசிச் சாதனங்களில் தரவிறக்கியும் பார்வையிட முடியும். தரவிறக்கும் ஒரு காணொளியை, பார்வையிட ஆரம்பித்து இரண்டு நாட்களுக்குள் பார்வையிட வேண்டும் என்பதுடன், தரவிறக்கி ஏழு நாட்களுக்குள் மட்டுமே குறித்த காணொளி நினைவகத்தில் காணப்படும்.
Iflix போன்ற இணையச் சேவைகளைப் பெற்றுக் கொள்வதில், பிரதான பிரச்சினைக்குரிய காரணியாக இணையப் பயன்பாடே இருக்கையில், ஒவ்வொரு காணொளிகளிலும் மூன்று வகையான கொள்ளவுடைய காணொளிகளை iflix வழங்குவதால், அவரவர் இணையப் பாவனைக்கு ஏற்ற வகையில் காணொளிகளை தெரிவு செய்யலாம். இது தவிர, காணொளிகளுக்கு உப தலைப்புகள் வழங்கப்படுவது உள்நாட்டு மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
47 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
1 hours ago
1 hours ago