Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 20 , மு.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த மூன்று மாதங்களில், இரண்டு மடங்குக்கும் அதிகமான இலாபத்தைப் பெற்றுள்ள யாகூ நிறுவனம், எதிர்பார்க்கப்பட்டதை விட, சிறந்த காலாண்டு இலாபத்தைப் பெற்றுள்ளதாக, நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (18) தெரிவித்துள்ளது.
செப்டெம்பர் 30ஆம் திகதி வரையான காலாண்டில், யாகூவின் வருமானமானது, 163 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது. கடந்தாண்டில், இதே காலப்பகுதியில், 76.3 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை, இலாபமாகப் பெற்றிருந்தது. இதேவேளை, இறுதிக் காலாண்டுக்கான வருமானமும், 6.5 சதவீதத்தால் உயர்ந்து, 1.3 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களாகக் காணப்படுகிறது.
வெரைஸன் கொமியூனிக்கேஷன்ஸுக்கு, தனது பிரதான வியாபாரங்களை விற்கும் யாகூவின் ஒப்பந்தமானது, பாரிய தரவு மீறல்களால், நிச்சயமற்ற தன்மையை அடைந்திருந்த நிலையில், மேற்கூறப்பட்ட செய்தியானது, நிச்சயமாக, யாகூவுக்கு ஊக்கத்தை அளிக்கும்.
2014ஆம் ஆண்டு, குறைந்தது 500 மில்லியன் மின்னஞ்சல் கணக்குகளைப் பாதித்த ஹக்கானது, யாகூவை வெரைஸன் வாங்குவதில் தாக்கம் செலுத்தலாம் என, வெரைஸன் நிறுவனத்துக்கு சட்ட ஆலோசனை வழங்குகின்ற பிரதான வழக்கறிஞர் தெரிவித்திருந்தார். தவிர, 4.83 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் ஒப்பந்தத்திலிருந்து விலகலாம் என்றவாறான கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில், ஆகக்குறைந்தது, தரவு மீறல்களினால், யாகூவின் வாடிக்கையாளர்கள் உடனடியாக வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது போன்று நடக்க வில்லை என செவ்வாய்க்கிழமை வெளியான தகவல்கள் இனங்காட்டுகின்றன. இணையப் பக்கங்களை பார்வையிட்டதிலும் மின்னஞ்சலை பாவித்ததிலும் வளர்ச்சியைக் காணக்கூடியதாக இருக்கின்றது என யாகூ தெரிவித்துள்ளது.
எவ்வாறெனினும், யாகூவை வெரைஸன் வாங்குவதற்கான ஒப்பந்தம், நகர்ந்து செல்லுமா என்ற சந்தேகங்களை, வெளியான தகவல்கள் தகர்த்தனவா என்பது சந்தேகத்துக்குரியதொன்றாகவே இருக்கின்றது. ஏனெனில், தங்களது எந்தத் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன என்று பார்வையிடுவதற்கு 500 மில்லியன் பேர் முயன்றதால், இணையப் பக்க பார்வையிடலும் மின்னஞ்சல் பாவனையும் அதிகரித்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
1 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago