Shanmugan Murugavel / 2016 ஜூன் 23 , மு.ப. 03:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாடசாலை மாணவர்கள் மத்தியில் புத்தாக்கத்திறனை ஊக்குவிப்பதற்காகவும் கணினியின் உதவியுடன் நாளாந்த பிரச்சினைகளைத் தீர்க்கும் திறனை ஊக்குவிப்பதற்காகவும் Yarl IT Hub என்ற தன்னார்வலர் நிறுவனத்தால், வட மாகாண கல்வித் திணைக்களத்துடன் இணைந்து நடாத்தப்பட்டு வரும் Yarl Geek Challenge (YGC) ஜூனியர் போட்டியின் இவ்வருடத்துக்கான இறுதிப் போட்டிகள், யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரியின் கேட்போர் கூடத்தில், எதிர்வரும் வாரயிறுதியில் இடம்பெறவுள்ளன.
முதலாம் நாள், சனிக்கிழமை (25) காலை 8 மணிக்கு போட்டிகள் ஆரம்பிக்கவுள்ளன. ஹக்கதன் தினம் என்று அழைக்கப்படும் முதல் நாளில், அணிப் பதிவுகளுடன் ஆரம்பித்து, Yarl Geek Challenge ஜூனியர் பற்றிய அறிமுகமும் எவ்வகையான முறையில் போட்டி இடம்பெறும் என்றும் அணிகளிடமிருந்து என்ன எதிர்பார்க்கப்படுகின்றன என்றும் விளக்கமளிக்கப்படும்.
அதனைத் தொடர்ந்து, வழிகாட்டுநர்கள் பற்றிய அறிமுகமும் அணிகளுக்கான வழிகாட்டுநர் அறிவிப்பும் இடம்பெறும். அதனைத் தொடர்ந்து ஹக்கதன் ஆரம்பமாவதுடன், அதனைத் தொடர்ந்து என்ன இடம்பெறுகின்றது பற்றி நடுவர்களுக்கான அறிக்கையிடலும் அதனையடுத்து மீண்டும் ஹக்கதனுடன் முதல் நாள் நிறைவுக்கு வரவுள்ளது.
இரண்டாவது நாள் ஞாயிற்றுக்கிழமை (26), நடுவர்கள் அறிமுகப்படுத்தப்படுதலுடன் ஆரம்பித்து, அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு அணியினது அளிக்கைகளும் காலை 9.30மணி முதல் இடம்பெறும். அதனையடுத்து, பிற்பகல் 2.20க்கு வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவதுடன் பரிசு வழங்குதலுடனும் நிகழ்வு நிறைவுக்கு வரவுள்ளது.
வலய மட்ட மதிப்பீடுகளில் 90க்கு மேற்பட்ட அணிகள் பங்குபற்றி, இறுதிப் போட்டிகளுக்கு 34 அணிகள் தகுதி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
9 minute ago
23 minute ago
39 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
23 minute ago
39 minute ago
50 minute ago