Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஏப்ரல் 02 , பி.ப. 02:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
"சொர்க்கத்தின் அரண்மனை - 1" ("Heavenly Palace 1") என அழைக்கப்படும் டியான்காங்-1 (Tiangong-1) முன்னோட்ட விண்வெளி நிலையம் பசுபிக் கடலில் விழுந்து நொறுங்கியுள்ளதாக சீன விண்வெளி ஆய்வு நிலையம் அறிவித்துள்ளது.
பூமியின் நீள் சுற்று வட்டப் பாதைக்குள் மீண்டும் இந்த விண்வெளி நிலையம் நுழைய முற்பட்ட சமயத்தில் இலங்கை நேரப்படி இன்று காலை 5.45க்கு பசுபிக் கடலில் விழுந்துள்ளதாக சீன விண்வெளி ஆய்வு நிலையம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானில் இருந்து கீழே விழும்போதே விண்கலத்தின் சில பாகங்கள் (பஸ் அளவிலானவைகள்) எரிந்துவிட்டதாகவும் சீன விண்வெளி மையம் தெரிவித்துள்ளது.
சீன விண்வெளி ஆய்வு நிலையம், 2023ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் நிரந்தர விண்வெளி நிலையம் ஒன்றை அமைக்கும் நோக்கில், அதற்கு முன்னோட்டமாக 2011ஆம் ஆண்டு செப்டெம்பர் 29ஆம் திகதி டியான்காங்-1 என்ற விண்வெளி நிலையத்தை விண்ணில் செலுத்தியது.
34 அடி நீளம் கொண்ட இந்த விண்வெளி நிலையத்தின் ஊடாக, பல்வேறு ஆய்வுகளையும், தனது நிரந்தர விண்வெளி ஆய்வு நிலையத்தை அமைக்கும் நோக்கில் சீனா மேற்கொண்டு வந்தது.
இந்நிலையில், சீன விண்வெளி நிலையக் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்புகளை இழந்த டியான்காங்-1 விண்கலம் மீண்டும் பூமியின் சுற்றுப்பாதைக்குள் நுழைய முயன்றபோது, உள்ள பசுபிக் கடலில் விழுந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago