Shanmugan Murugavel / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய அமெரிக்காவின் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகமானது, கூகிளின் தானியங்கிக் காரின் உள்ளே இருக்கும் கணினியானது, வாகனத்தின் சாரதியாகக் கருதப்படும் எனத் தெரிவித்துள்ளமையானது கூகிளின் தானியங்கிக் கார்த் திட்டத்தின் முக்கியமானதொரு மைல்கல்லாகவும் அனைத்து தானியங்கிக் கார்த் தொழிற்துறையின் முக்கியமானதொரு மைல்கல்லாகவும் அமையவுள்ளது.
மேற்படி அறிவிப்பின் மூலம், வழிதிருப்பும் சக்கரமோ அல்லது பெடல்களோ இல்லாத கூகிள் காரானது பாரியளவில் வீதிகளில் பயணிக்கவுள்ளது. முன்னைய காலங்களில், பாதுகாப்பு நெறிமுறைகள் காரணமாகவும் ஏற்கெனவே உள்ள வீதி ஒழுங்குகள் காரணமாகவும் தானியங்கிக் கார்த் தொழில்நுட்பத்துக்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை.
எவ்வாறாயினும் மேற்படி அனுமதியானது ஆரம்பகட்டமாகவே காணப்படுகிறது. ஐக்கிய அமெரிக்காவின் மத்திய அரசாங்கத்தினுடைய மோட்டார் வாகன பாதுகாப்பு நெறிமுறைகளில் எத்தனை கூகிளின் தானியங்கிக்கார்களுக்கு பொருந்துகிறது என கூகிளானது, ஐக்கிய அமெரிக்காவின் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகத்துக்கு விடுத்த கோரிக்கையின் ஒரு அங்கமாகவே மேற்படி அனுமதி கிடைத்துள்ளது.
36 minute ago
43 minute ago
48 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
43 minute ago
48 minute ago
2 hours ago