Editorial / 2023 ஜூலை 14 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நிலவை நோக்கிய பயணத்தை இன்று (14) பிற்பகல் 2 மணி 30 நிமிடத்திற்கு தொடங்குகிறது.
நிலவுக்கு சந்திரயான்-3 விண்கலத்தை சுமந்து செல்லும் ராக்கெட்டிற்கான இருபத்தைந்தரை மணி நேர கவுன்டவுன் தொடங்கியது.
நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம், ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்ணை நோக்கி பாய உள்ளது.
சந்திரயான்-3 விண்கலத்தை சுமந்து செல்லும் 'LVM 3 M-4 ராக்கெட்டில் விண்கலத்தின் அனைத்து பாகங்களும் முழுமையாக பொருத்தப்பட்டு உள்ளன. சோதனை ஓட்டமும் நிறைவடைந்த நிலையில், எரிபொருள் நிரப்பும் பணிகளும் நிறைவடைந்தன.
இந்நிலையில், சந்திரயான்-3 விண்கலத்திற்கான இருபத்தைந்தரை மணி நேர கவுன்டவுன் நேற்று (13) மதியம் ஒரு மணிக்கு தொடங்கியது. கவுன்டவுன் முடிந்து சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து, நாளை மதியம் 2:35 மணியளவில் ராக்கெட் விண்ணில் பாய்கிறது. நிலவுக்கு அனுப்பப்படும் 3வது விண்கலமான சந்திரயான்-3 விண்வெளி ஆய்வில் இந்தியாவை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5 hours ago
5 hours ago
8 hours ago
05 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
8 hours ago
05 Apr 2026