Editorial / 2018 ஜூலை 23 , பி.ப. 02:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேஸ்புக் நிறுவனமானது முதல்முறையாக இணைய பயன்பாட்டிற்கென, சுயமாக செயற்கைகோள் ஒன்றை அனுப்பத் தயாராகியுள்ளது.
இதற்கு “அதீனா” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. பேஸ்புக் தற்போது உலகம் மொத்தத்தையும் இணையம் மூலம் எளிதாக இணைக்க வழி செய்துகொண்டிருக்கிறது.
இதற்காக ஏற்கனவே, “அகுலா” என்று பறக்கும் பலூன் மூலம், இணையத்தை சில ஆப்பிரிக்க கிராமங்களுக்கு வழங்கியது. இப்போது நேரடியாக சாட்டிலைட்டில் அனுப்ப முடிவெடுத்துள்ளது.
இந்த சாட்டிலைட்டிற்கு அதீனா என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. இது முழுக்க முழுக்க இணைய சேவை பயன்பாட்டிற்காக மட்டுமே அனுப்பப்பட உள்ளது. உலகம் முழுக்க எல்லா நாட்டு மக்களும் இந்த சாட்டிலைட் மூலம் இணையத்தை பயன்படுத்தும் வகையில் இதை உருவாக்க இருக்கிறது. இதை வைத்து இப்போது சில சோதனைகள் செய்துகொண்டு இருக்கிறார்கள்.
இதன் மூலம் எல்லோரும் பேஸ்புக்கை எளிதாக பயன்படுத்த முடியும். அது மட்டுமில்லாமல் மற்ற இணைய சேவையை பயன்படுத்தவும், இந்த சாட்டிலைட் உதவியாக இருக்கும். உலகம் முழுக்க எளிதாக இணையம் மூலம் இணைப்பதே குறிக்கோள் என்று மார்க் ஸூக்கர்பெர்க் கூறியுள்ளார். அதற்காகவே இந்த சாட்டிலைட்டும் அனுப்பப்பட உள்ளது.
இந்த வருடம் இந்த ராக்கெட்டை அனுப்பும் திட்டத்தில் பேஸ்புக் நிறுவனம் இருந்தது. ஆனால் இடையில் டேட்டா திருட்டு பிரச்சனை சம்பவம் தொடர்பில், அவர்களின் பங்குகள் சரிந்து பணிகள் பாதிக்கப்பட்டது. இதனால் அடுத்த வருடம் மார்ச் மாதம் இந்த சாட்டிலைட் அனுப்பப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனுடைய பல முக்கிய பலன்களை பேஸ்புக் மறைமுகமாக வைத்துள்ளது.
இந்த நிலையில், இப்படி உலகம் முழுக்க இணையத்தால் இணைக்க ஏற்கனவே எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முடிவு செய்து இருக்கிறது. இதற்காக அடுத்து சில வருடங்களில் ராக்கெட் அனுப்ப உள்ளது. அதற்கு அடுத்து சாப்ட் பேங்க் நிறுவனமும் இப்படி சாட்டிலைட் அனுப்ப உள்ளது. அதேபோல் அமேசானின் ப்ளு ஓரிஜின் நிறுவனமும் இந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளது.
6 hours ago
6 hours ago
6 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago
20 Dec 2025