2025 மே 02, வெள்ளிக்கிழமை

சீனாவுக்குச் செல்ல முயல்கிறது பேஸ்புக்?

Shanmugan Murugavel   / 2016 நவம்பர் 24 , பி.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமூகவலைத்தள ஜாம்பவானான பேஸ்புக் தடை செய்யப்பட்டுள்ள சீனாவுக்குள் நுழையும் முகமாக, குறிப்பிட்ட புவியியல் பகுதிகளில் உள்ள மக்களின் கணக்குகளிலிருந்து பகிர்வுகள் தென்படுவதை தடுக்கும் மென்பொருளினை பேஸ்புக் உருவாக்கியுள்ளதாக, பேஸ்புக்கின் தற்கால, முன்னாள் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த மென்பொருளானது இரகசியமானது என்பதால், குறித்த பணியாளர்கள் தமது விவரங்களை வெளியிடவில்லை.

குறிப்பிட்ட உள்ளடக்கங்கள் பகிரப்பட்ட பின்னர், அவற்றை முடக்குமாறான அரசாங்க வேண்டுகோள்களுக்கு பணியும் அமெரிக்க இணைய நிறுவனங்கள் போன்று, பாகிஸ்தான், ரஷ்யா, துருக்கி ஆகிய நாடுகளில் உள்ளடக்கங்களை பேஸ்புக் கட்டுப்படுத்தியிருந்தது. எனினும், தற்போது ஒரு படி மேலே சென்று, சீனாவிலுள்ளோரின் கணக்குகளில் உள்ளடக்கங்கள் தென்படுவதை முன்னரே பேஸ்புக் தடுக்கவுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .